நீதித்துறையில் தமிழகம் முதல் இடம்….நீதியை விரைவாகவும் முனைப்பாகவும் வழங்குகிறது

நீதியை விரைவாகவும் முனைப்பாகவும் வழங்குவது, ஒரு திறம்பட நிர்வகிக்கப்படும் நவீன நாட்டின் முக்கிய அம்சமாகும்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டின் இந்திய நீதி அறிக்கைகளில் நீதித்துறை என்ற பிரிவில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

2011 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை, சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 520 நீதிமன்றங்களை இந்த அரசு அமைத்துள்ளது. 2012ஆம் ஆண்டு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (போக்சோ), வழக்குகளை விசாரணை மேற்கொள்வதற்காக 16 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் உட்பட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1,332 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2021–22ஆம் ஆண்டு இடைக்கால வரவுசெலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய நீதிமன்றக் கட்டடங்களைக் கட்டுவதற்காக 289.78 கோடி ரூபாய் உட்பட நீதி நிர்வாகத்திற்காக 1,437.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!