நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி 250 மாணவர்களை கொண்டு தொடர்ச்சியாக 30 நிமிடம் இரட்டை கம்புகளை சுழற்றி சாதனை.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிக்காக 250 சிலம்பப் பயிற்சி மாணவர்கள் பங்கேற்ற இரட்டை சிலம்ப காம்புகளை 30 நிமிடம் தொடர்ச்சியாக சுழற்றி நோபல் ரெக்கார்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் நிகல்சியாக பரத நாட்டிய கழைநிகழ்ச்சிகல் நடை பெற்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியை வேலன் வாழும் கலை கூட அறக்கட்டளை சிலம்பாட்ட பயிற்சி பள்ளி கழகத்தின் சார்பாக நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியானது கொரோனா நோய் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், மற்றும் தன்னார்வலர்களின் சேவையை பாராட்டும் விதமாக நோபல் ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி அமைப்பாளர் தெரிவித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து நிகழ்ச்சிகளை நடத்தினர். இறுதியாக நோபல் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தின் அமைப்பாளர்கள் 250 மாணவர்களை கொண்டு இரட்டைக் கம்புகளை தொடர்ச்சியாக 30 நிமிடம் சுழற்றிய சாதனை சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இதில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைப்பாளர்கள் வழங்கினர்.