நோய் தொற்றால் உணவின்றி தவித்த வயதானவர்களுக்கு உணவு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
தமிழகத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கொரோனா நோய்தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது.
இந்நிலையில் கிராமப்புறங்களில் வயதான முதியவர்கள் உணவின்றி சிலர் தவித்து வரும் நிலையை கருத்தில் கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியகுளம் பகுதியில் உள்ள காவலர்களின் உதவியுடன் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள 60 க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி வயதான முதியவர்களுக்கு உணவு வழங்கியும் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளான முகக் கவசம் அணிதல் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருப்பது அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட விழிப்புணர்வு அறிவுரைகளை கூறி அவர்களுக்கு உணவு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் பெரியகுளம் பகுதியில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர் சுகுமார் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் காவலர்கள் உடனிருந்தனர் பங்கேற்றனர்.