பசிபிக் பெருங்கடல் அருகே பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 5.7 ஆகப் பதிவு

போர்ட் மோரெஸ்பி,

பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், “பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வடகிழக்குப் பகுதியில் பின்ஷாப் நகரத்தில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவாகியது.

இதன் ஆழம் 29.3 கிலோ மீட்டர் ஆகும்என்று தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் இல்லை. எனினும், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2018 ம் ஆண்டு பப்புவா நியூ கினியாவின் போர்கோ மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 67 பேர் பலியாகினர். 500 பேர் காயமடைந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

 

Translate »
error: Content is protected !!