2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு துறையில் மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளதாக மதுரையில் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
பாரதியார் நினைவு நாளையொட்டி பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலை பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறைஅமைச்சர் மூர்த்தி மரியாதை செலுத்தினார்.
பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி,
பத்திரப்பதிவு துறையில் முறைகேடாக பதிவு நடந்தால் சார் பதிவாளர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட வரைவு கொண்டுவரப்படும்,
இந்த முறைகேட்டில் தொடர்புடைய மற்ற துறையை சேர்ந்தவர்களுக்கும் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறும் சட்ட வரைவு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
2016 முதல் 2021 வரை வெளிப்படையாகவே பத்திரப்பதிவு மோசடி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது, அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளது என்றார். மேலும்
முறைக்கேடு தொடர்பாக விசாரணை உயர்நிலைக்குழு அமைக்கப்பட உள்ளது.
இன்னும் 6 மாத காலத்திற்குள் பத்திரபதிவு மேலும் எளிமையாக்கப்படும் என்றார்.