திருச்சியில் பள்ளிகள் திறப்பது குறித்து இன்று கருத்து கேட்டு கூட்டம்

கொரேனா பரவல் அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது முதல் 9மாதகாலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் மூடப்பட்டு, வீடுகளிலேயே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகிறது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் அளிக்கும் வழிமுறைகளை பின்பற்றி, சந்தேகங்களை நிவர்த்திசெய்து தேர்விற்கு தங்களை தயார்படுத்தும்வகையில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி பெற்றோருடன் கருத்துக்கேட்பு கூட்டம் இன்று திருச்சி மாவட்டத்தில் இன்று தொடங்கி 8ம்தேதி வரை நடைபெறுகிறது.

இதன் ஒருபகுதியாக திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள புனித சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணிமுதல் முதல் ஒவ்வொரு குழுக்களாக ஆசிரியர்கள் அமரவைக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் பெற்றோர்கள் வருகைதந்து வகுப்பு மற்றும் பிரிவு அடிப்படையில் தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

அதேநேரம் பள்ளிகள் திறப்பின்போது மாணாக்கர் பாதுகாப்பு, பள்ளிகளுக்கு மாணாக்கர்களை பாதுகாப்பாக அழைத்துவருவது தொடர்பாகவும் பெற்றோர்ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் தலைமையாசிரியர் சவரி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றதில், ஒருமித்தவகையில் பாதுகாப்பு வழிமுறைகளைக் கையாண்டு பள்ளிகளைத் திறக்கவும் அவர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!