தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் வாகன சோதனை சாவடி மையம் உள்ளது சபரிமலை சீசன் மற்றும் பிற காலங்களில் வாகனங்கள் கேரளாவிற்கு அதிகம் செல்வதன் காரணமாக போக்குவரத்து துறை சார்பில் பழனிசெட்டிபட்டி அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு,
அண்டை மாநிலம் செல்வதற்கு பெர்மிட் வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ஐந்து மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை விஜிலன்ஸ் டி எஸ் பி சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளர் கீதாவுடன் குழுவினர் அந்த சோதனை சாவடி மையத்தில் ரெய்டு நடத்தினர்.
இந்த ரெய்டில் கணக்கில் வராத ரூ.5,500 கைப்பற்றப்பட்டது இதனை அடுத்து முக்கிய ஆவணங்களும் எடுத்துச் செல்லப்பட்டது.