வடகிழக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் நீர்மின்சார நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக 30 சீன பொறியாளர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் இன்று காலை பெர்சீம் முகாமில் இருந்து பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
பின்னர் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. சீன பொறியியலாளர் மற்றும் சீன வீரர்கள் உட்பட பத்து பேர் பலியானர்கள். மேலும் பலர் காயமடைந்து தாசு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெறுபவர்களில் பலரின் நிலை கவலைப்படுவதால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், சீன நாட்டினர் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட பஸ் குண்டுவெடிப்பு குறித்து முழு விசாரணை நடத்துமாறு பாகிஸ்தானை சீனா கேட்டுக் கொண்டுள்ளது.