பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது – எடப்பாடி கேள்வி

சென்னை

பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேறியது. உரிய எண்ணிக்கையிலான தொகுதிகளை கொடுக்கவில்லை என்பதால் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரு கூட்டணி அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல, ஒரே தொகுதியை பல கூட்டணி கட்சிகள் கேட்பார்கள். இதையெல்லாம் பேசி ஆலோசனை செய்துதான் முடிவு எடுப்போம்.

புதிய தமிழகம் கூட்டணியில் எங்களுடன் இல்லை. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக இழப்பு என்பதே கிடையாது. தேமுதிக பக்குவம் இல்லாத அரசியல்வாதிகளாக உள்ளார்கள். கூட்டணி என்பது அவ்வப்போது ஏற்படுகிற ஒரு சம்பவம்.

கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் இப்படியெல்லாம் பேசுவது சரியில்லை. அது கூட்டணிக்கும் அழகல்ல. ஒரு கட்சி கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனியாக போவது தவறில்லை. ஆனால் ஒரு கட்சி மீது பழி சுமத்துவது தவறு. நானே போய் அவர்களிடம் பேசினேன் என்றார். அப்போது செய்தியாளர்கள் பாமகவுக்கு கொடுத்த மரியாதையை இவர்களுக்கு கொடுக்கவில்லை என தேமுதிக குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து முதல்வர் கூறுகையில் அதெப்படி கொடுக்க முடியும்? அந்தந்த கட்சிகளுக்கென தகுதி இருக்கிறது இல்லையா? வாக்கு வங்கி என ஒன்று இருக்கிறது. அதை வைத்துதான் தொகுதிகள் வழங்கப்படுகிறது. இதற்கேற்பதான் பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டது.

திமுக எங்கே முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மக்கள் என்ன எண்ணுகிறார்களே அதை அறிவிப்புகளாகவே நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அதிமுக. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்து உடனே அமல்படுத்திய கட்சி அதிமுக என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Translate »
error: Content is protected !!