மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநதியின் நினைவு தினம் இன்று. இந்நிலையில், கருணாநிதியின் பேரனும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் வெளியிட்ட பதவியில்,
‘முத்தமிழறிஞரின் 3-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பலரின் பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம்”என பதிவிட்டுள்ளார்.