பா.ம.கவினர் வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டுக்காக கொடுத்த மனுவை கோ- அபிஷேகபுரம் கோட்டத்தில் வாங்க மறுப்பு பாமக நிர்வாகிகள் வாக்குவாதம்

வேலைவாய்ப்புகளில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி பா..கவினர் இன்று மாநகர் சார்பில் 5 இடங்களில் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். கோஅபிஷேகபுரம் கோட்டத்தில் மனு வாங்க மறுப்பு பாமக நிர்வாகிகள் வாக்குவாதம்.

திருச்சி மாநகர் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் இருந்து பேரணியாக சென்று  கோஅபிஷேகபுரம்  அலுவலகத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.உதவி ஆணையர் வினோத் அலுவலகத்தில் நீண்ட நேரமாக காத்திருந்த பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த அதிகாரிகள் உதவி ஆணையர் தேர்தல் பணிக்காக சென்றுவிட்டதாகவும் தற்போது தான் தகவல் கொடுத்ததாகவும் அலுவலகத்தில் மனுவை கொடுத்து செல்லவும் என்று கூறியதால் அதிகாரிகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது அதன் பின்னர் வருவாய் அதிகாரி பாட்டாளி மக்கள் கட்சியினர் சமாதானம் செய்து மனுவை பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் கலைந்து சென்றனர்.இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வினோத் மற்றும் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!