பிக் பாஸ் லாஸ்லியா தற்போது பாடகியா..!

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார்.அந்நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் கைவசம்பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்போன்ற படங்கள் உள்ளன.

பிரெண்ட்ஷிப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்துள்ளார்.

இதற்கிடையில், நடிகை லாஸ்லியா இந்த படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். ஃப்ரெண்ட்ஷிப் படத்தின்அடிச்சு பறக்கவிடுமாஎன்ற குத்துச்சண்டை பாடலை லாஸ்லியா பாடியுள்ளார். இந்த பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

Translate »
error: Content is protected !!