த்திரை நடிகை சித்ரா நேற்று பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள பிளசண்ட் டே ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அதிகாலை 2 மணியளவில் ஷூட்டிங் முடித்து வந்த அவர் குளிக்க செல்வதாக கூறி அறைக்கதவை மூடியதாகவும், நீண்ட நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்து மாற்றுச்சாவி மூலம் உள்ளே சென்று பார்த்தபோது அவர் இறந்து கிடந்ததும் தெரிய வந்தது. அவரது கன்னத்தில் காயங்கள் இருந்ததால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில் சித்ராவின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று உடல் கூராய்வு பணி நடைபெற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
டற்கூறு ஆய்வின் முடிவில் இது தற்கொலை தான் என்று உறுதியாகியுள்ளது. அவரது இறுதி சடங்குகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், தேவைப்பட்டால் அவருக்கு நெருக்கமான நடிகர், நடிகைகளிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட
ஹோட்டலில் சிசிடிவி காட்சிகள் சரிவர இயங்காததால் ஹோட்டல் மேனேஜர் உள்பட 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.