பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் நேற்று திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகளில் வசித்து வந்த மக்கள் அதிர்ச்சியடைந்த படி வீட்டை விட்டு வெளியே வீதிக்கு ஓடி வந்தனர். அது தொடர்பாக பிலிப்பைன்ஸ் புவியியல் ஆய்வு மையம் தெரவித்ததாவது, ‘‘ஜோஸ் அபாட் சாண்டோஸ் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 113 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டு நேரப்படி காலை 10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சில வினாடிகள் நீடித்துள்ளது. பூமி அதிர்ந்த போது அங்குள்ள கடைகள், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட இல்லை.