பீகாரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்த வாலிபர் உள்பட இருவர் கைது

பீகாரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்த வாலிபர் உள்பட இருவரை அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சென்னை, கிண்டி பகுதியில் கஞ்சா விற்பனை ரகசியமாக நடைபெறுவதாக அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனுக்கு அவரது தனிப்பட்ட தொலைபேசி எண் 8754401111ற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து விக்ரமனின் தனிப்படை எஸ்ஐ செல்வகுமார், தலைமைக் காவலர்கள் வெங்கடேசன், சங்கர், முதல்நிலை காவலர்கள் பூர்ணகுமார், சண்முகம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அது தொடர்பாக ரகசியமாக கண்காணித்தனர். இந்நிலையில் வேளச்சேரி மெயின்ரோட்டில் இருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபர்களைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களது வாகனத்தை சோதனையிட்ட போது அதற்குள் சுமார் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் வேளச்சேரியைச் சேர்ந்த ராகுல் குமார் (வயது 25) என்றும் மற்றொரு நபர் அருண் தேவன் (வயது 27) என தெரிவித்தனர். ராகுல் குமார் சென்னையில் பானிபூரி விற்றுவரும் நிலையில் தனது சொந்த ஊரான பீகாருக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து தன்னுடைய நண்பரான கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ள அருண் தேவன் என்பவர் மூலம் விற்க முயன்றதாகவும் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து கிண்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றக்காவலுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Translate »
error: Content is protected !!