புதிய திட்டம்…வீட்டில் இருந்தபடியே ‘1100’ என்ற எண்ணை அழைத்து அரசின் சேவைகளை பெறலாம்

சென்னை,

வீட்டில் இருந்தபடியே குறைகளை சொல்லி தேவையான சேவையை முதலமைச்சரின் உதவி மையம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கவர்னர் கூறினார்.

வீட்டில் இருந்தபடி முதலமைச்சரின் உதவி மையத்தின் ‘1100’ என்ற எண்ணை அழைத்து அரசின் சேவைகளை பெறலாம் என்று கவர்னர் கூறியிருக்கிறார். தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் உரை நிகழ்த்தினார்

மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டுமென்ற இந்த அரசின் நிலையான நோக்கத்தை அனைவரும் நன்கு அறிவார்கள். கடந்த ஆண்டு, முதன்முறையாக இந்திய அரசு வெளியிட்டுள்ள நல் ஆளுமைத் திறனுக்கான குறியீட்டுப் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றது.

மேலும், ‘இந்தியா டுடேபத்திரிகை 2020 ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில், ‘மாநிலங்களின் நிலைஎன்ற தலைப்பில், மேற்கொண்ட ஆய்வில், ‘ஒட்டுமொத்த செயல்திறன் மிக்க மாநிலம்என்று தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின், நடைமுறைக்கேற்ற, செயல்திறன் மிக்க ஆளுமையினை எடுத்துக்காட்டுகிறது. நம் மாநிலம் தொடர்ந்து தேசிய அளவில் பெறும் விருதுகள் மற்றும் பாராட்டுகளுக்கு, முதலமைச்சரையும், அவர் தலைமையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு அமைப்புகளையும் நான் வாழ்த்துகிறேன்.

 ‘பரிவுள்ள ஆளுமைஎன்பது இந்த அரசின் முக்கியக் கோட்பாடாகும். ‘அம்மா திட்டம்’, ‘முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம்’, ‘வட்ட இணையவழி மனுக்கள் கண்காணிப்பு அமைப்புமற்றும்அம்மா அழைப்பு மையம்உள்ளிட்ட பல்வேறு குறை தீர்க்கும் வழிமுறைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

தற்போதுள்ள அனைத்து குறை தீர்க்கும் அமைப்புகளையும் முதலமைச்சரின் உதவி மையம் வாயிலாக ஒருங்கிணைத்து, ‘முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்செயல்படுத்தப்படும்.

அனைத்துக் குறைகளையும் உரிய கால வரம்பிற்குட்பட்டு, தீர்வு காண்பதை உறுதிசெய்யும் வகையில், ஒரு வலுவான வழித்திட்ட அமைப்பும், குறைகளை தொடர்ந்து கண்காணிப்பதற்கான முகப்புப் பக்கமும் உருவாக்கப்படும். குடிமக்கள் தங்கள் வீட்டிலிருந்தே, முதலமைச்சரின் உதவி மையத்தின் 1100 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அரசின் சேவைகளை விரைவில் பெற இயலும்.

 

Translate »
error: Content is protected !!