புத்தாண்டு கொண்டாட்டம் * கட்டுப்பாடுகள் விதித்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

சென்னை நகரில் புத்தாண்டை கொண்டாட்டத்தை தமிழக அரசு தடை செய்ததை ஒட்டி கடற்கரைச்சாலைகள், முக்கிய மேம்பாலங்களில் போக்குவரத்தை தடை செய்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை அமல்படுத்துவதில் சென்னை நகர காவல்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் 3 கூடுதல் கமிஷனர்கள், 4 இணைக்கமிஷனர்கள், 12 துணைக்கமிஷனர்கள் தலைமையில் புத்தாண்டு பாதுகாப்புக்கு 10 ஆயிரம் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுகின்றனர். இன்று 31ம் தேதியன்று இரவு சென்னை எண்ணுார் தொடங்கி முட்டுக்காடு வரையிலும் உள்ள கடற்கரைச்சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 7 மணி முதல் கடற்கரைச்சாலைகள் முற்றிலுமாக முடக்குவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், இணைக்கமிஷனர்கள் லட்சுமி, பாண்டியன் மேற்பார்வையில் துணைக்கமிஷனர்கள் மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் செய்து வருகின்றனர். மேலும் பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க சென்னை அண்ணாசாலை உள்ளிட்ட 300 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.

முக்கியமாக சென்னை நகரில் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் இயங்கும் பார்களை இரவு 10.30 மணியுடன் அடைக்கும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். போலீஸ் விதிகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 26ம் தேதி முதல் 4 நாட்களாக இந்த விதிமுறை நட்சத்திர ஓட்டல்களில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 31ம் தேதி இரவு வரை நட்சத்திர ஓட்டல்களில் இந்த நடைமுறை அமலில் இருக்கும் என போலீசார் சார்பில் தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!