புயலாக கிளம்பும் அதிமுக.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! பாஜக கூட்டணி உறுதியா..?

சென்னை,

தடைகளை எல்லாம் கடந்து அதிமுக கட்சி தமிழக சட்டசபை தேர்தலுக்காக வேகம் காட்ட தொடங்கி உள்ளதுதிமுகவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் இன்னொரு அதிரடி முடிவை இன்றே அதிமுக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு மீட்டிங்குகளை அடுத்தடுத்து நடத்தி அதிமுக படுபிஸியாக இருக்கிறது. ஒரு பக்கம் கூட்டணி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலும் தீவிரமாக நடக்கிறது.

இதெல்லாம் போக இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் தொடங்கி உள்ளது. இதில் பல முக்கிய முடிவுகளை அதிமுக எடுக்க போவதாக தகவல்கள் வருகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை அதிமுகவிற்கு இருந்த பெரிய தலைவலி என்று பார்த்தால் அது அமமுகவும் சசிகலாவும்தான்.

ஆனால் சசிகலா அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்க போவதாக அறிவித்துவிட்டார். இதனால் அமமுகவும் தேர்தலுக்கு முன்பாக தனது பலத்தை இழந்து உள்ளது. தொடர் திருப்பங்களால் வாக்குகள் பிரியும் என்ற எந்த கவலையும் இல்லாமல் அதிமுக தேர்தல் மீது மட்டும் கவனம் செலுத்த முடியும்.

இதனால் வேகமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டு தேர்தல் மீது கவனம் செலுத்தும் எண்ணத்தில் அதிமுக உள்ளது. இன்னும் 5 நாட்களுக்குள் அனைத்தையும் செய்து முடிக்கும் பிளானில் அதிமுக இருக்கிறது. அதன்படி இன்று அதிமுக சார்பாக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்கிறார்கள். நேற்று விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நடந்த நிலையில் இன்று முதல்கட்ட பட்டியல் வெளியாகும் என்கிறார்கள்.

மார்ச் 10ம் தேதிதான் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக அதிமுக இரண்டு கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு, தேர்தல் அறிக்கையையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நாளை மாலைக்குள் மொத்தமாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்து ஒப்பந்தங்களை செய்யும் முடிவில் அதிமுக இருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றிபெறவேட்பாளர், கூட்டணி, தேர்தல் அறிக்கைஆகிய மூன்று விஷயங்கள் ரொம்ப முக்கியம் என்று முதல்வர் பழனிசாமி கருதுவதாக அதிமுகவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த மூன்றையும் வேகமாக செய்து முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் முடிவு செய்துள்ளனர்.

திமுகவிற்கு முன்பாக அனைத்தையும் முடித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்பதில் முதல்வர் இபிஎஸ் தீர்க்கமாக இருக்கிறாராம். அரசியல் செய்திகள் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி புதிய நீதிக் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் புதிய தமிழகம் பகுஜன் சமாஜ் கட்சி மக்கள் நீதி மய்யம் மனிதநேய ஜனநாயகக் கட்சி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி எஸ்டிபிஐ

அதிலும் இன்று அதிமுக வெளியிட இருக்கும் வேட்பாளர் பட்டியலில் பல முக்கிய வேட்பாளர்கள் இடம்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது . இன்றைய பட்டியல் கண்டிப்பாக திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் பட்டியலாக இருக்க போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் அதே நேரம் இன்னொரு பக்கம் பாஜகவுடனான கூட்டணி இன்று இறுதி செய்யப்படும் என்றும் கூறுகிறார்கள்.

Translate »
error: Content is protected !!