சென்னை: புரேவி புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.கால்நடைகளை இழந்தவர்களுக்கும், குடியிருப்புகள் சேதமடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புரேவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது கடந்த 33 மணி நேரத்திற்கு மேலாக பாம்பன் அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கால்நடைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டன. 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, புரேவி புயல் காரணமாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.