தமிழகத்தில் பெட்ரோல் விலை 100ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நிலைமையை உணர்ந்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் இந்த 3 ரூபாய் விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.49க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.