பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக இந்தியாவிலேயே சென்னை முதலிடம்…

சென்னை,

பெண்களுக்கான பாதுகாப்பு நகரமாக இந்தியாவிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகளுக்கு பல்வேறு வகையில் உதவி செய்வதற்காக சென்னை போலீசில்தோழிஎன்ற அமைப்பு செயல்படுகிறது. இந்தப் பயிற்சியின் தொடக்க விழா, சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தென் சென்னை கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமை வகித்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை துணை கமிஷனர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் புத்தாக்க பயிற்சி முகாமை தொடக்கி வைத்து பேசினார்.

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பதியும் சமூக முத்திரையை களைந்து எவ்வாறு அணுகுவது, அவர்களுக்கு எப்படி வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துவது, கல்விக்கான உதவிகளைச் செய்வது போன்றவையே தோழி திட்டத்தின் முக்கியமான குறிக்கோளாகும். இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை உள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து, பேராசிரியர் ஆண்ட்ரூ சேசுராஜ், டாக்டர் ஜெயக்குமார், வழக்குரைஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி, திரைப்பட நடிகர் தாமு ஆகியோர் பெண் போலீசாருக்கு தோழி திட்டப் பயிற்சியை அளித்தனர். முன்னதாகதோழிஅமைப்பு போலீசாருக்கு கமிஷனர் நினைவு பரிசு வழங்கினார். ‘தோழிஅமைப்பின் செயல்பாடு குறித்து குறும்படமும் வெளியிடப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!