பெரியகுளத்தில் தீயணைப்பு துறை சார்பாக பேரிடர் மீட்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் வராக நதிக்கரையில் தீயணைப்புத் துறை சார்பாக  பொதுமக்களுக்கு நல்ல கருத்துக்களையும் மற்றும் பேரிடர் ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது என்று ஒரு விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
இதில் பருவ மழையின்போது ஏற்படும் வெள்ளத்தால் பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டாமல் தடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி  நடத்தப்பட்டது. மழை, வெள்ளத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள், பேரிடர்களில் சிக்குபவர்களை பொதுமக்களே  வாழை மரங்கள், காலி கேன்கள், லாரி டியூப்கள்ஆகியவைகளைக் கொண்டு மீட்கும் முறைகள் குறித்தும், தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் உயிர் காக்கும் மிதவை, லைஃப் ஜாக்கெட், கயிறு, படகு ஆகியவைகளைக் கொண்டு  மீட்கும் முறைகள் குறித்தும்  தீயணைப்புத் துறையினர் செயல்முறை விளக்கமளித்தனர்.நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Translate »
error: Content is protected !!