பண்டிகை முன்பணம், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியகுளம் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு பேருந்து போக்குவரத்து பணிமனை முன்பாக, தொழிற்சங்கங்களில் கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தமிழக அரசு உடனடியாக போக்குவரத்து ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும், ஓராண்டாக கிடப்பில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், ஆண்டுக்கு 240 நாட்கள் பணிகளை நிறைவு செய்த போக்குவரத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியகுளம் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த மாத இறுதியில், போக்குவரத்து தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.