பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை நகரில் காவல்துறை சார்பில் நடந்த பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

சென்னை நகரில் பள்ளி, மாணவ மாணவியருக்கு ‘தேசத்தை கட்டமைப்பதில் காவல் துறையின் பங்கு’ என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி காவல்துறை சார்பில் நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த போட்டியில் 73 பள்ளிகளிலிருந்து 316 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மண்டல அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 மாணவ, மாணவிகளுக்கு இறுதிப்பேச்சுபோட்டி கடந்த நவம்பர் மாதம் 2ம் தேதியன்று நடந்தது. இதில் தமிழ் பேச்சுப்போட்டியில் 3 மாணவ மாணவிகளும், ஆங்கிலப் பேச்சுப்போட்டியில் 3 மாணவ, மாணவிகள் வெற்றியாளர்களக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்டு இறுதிப் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கும், மண்டல அளவில் வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். மேலும் பேச்சு போட்டியில் நடுவர்களாக பங்கேற்றவர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் அமல்ராஜ், இணைக்கமிஷனர்கள் சுதாகர், மல்லிகா, மற்றும் நிர்வாகப்பிரிவு துணைக்கமிஷனர் பெரோஷ்கான் அப்துல்லா காவல் அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!