மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் பிரச்சாரத்தை செய்து ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் திமுக அவர்கள் ஆட்சியில் சாதனை என எதையும் சொல்லவில்லை…
தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதிக்கு வந்த தமிழக முதல்வரை எடப்பாடி பழனிச்சாமி வழி நெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.. தமிழக முதல்வரை துணை முதல்வரின் குடும்பத்தினர் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்..
அங்கிருந்து போடி தேவர் சிலை அருகே வந்து போடி சட்டமன்ற தொகுதி ஓ பன்னீர்செல்வம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி யோகிராஜன் கம்பம் சட்டமன்ற தொகுதி சையதுகான் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் முருகன் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அம்மாவின் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் எனக் கூறி மக்களிடம் உரையாற்றினார்..
நன்றி மறந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு மக்கள் கொடுக்கும் தண்டனையை என்றும் அவர் மறக்கக் கூடாது. அதிமுக தொண்டர்களின் உழைப்பால் விலாசம் கிடைத்த தங்க தமிழ்ச்செல்வனை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் அதிமுகாவல் விலாசம் பெற்று திமுகவில் இணைந்தவர். அதிமுக தொண்டர்கள் உழைப்பால் அம்மா அவரை எம்எல்ஏ., ராஜியசபா உறுப்பினர் ஆக்கினார்.
நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்தவர்கள் மக்கள் மனதில் வாழ்வார்கள். அந்த வகையில் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர் எம்ஜிஆர் ஜெயலலிதா, ஆனால் வீட்டுக்காக வாழ்ந்தவர் கருணாநிதி திமுக பொய் சொல்லி மக்களை சந்திக்கிறார்கள்., ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது,
100 நட்களில் பொதுமக்களின் புகாருக்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? அவரது அப்பா காலத்தில் இதை ஏன் செய்யவில்லை ஆட்சி அதிகாரத்தில் உள்ளபோது வீட்டை பார்த்தார்கள். தேர்தல் வந்தால் மக்களிடம் வருகிறார்கள் ஸ்டாலின் பெட்டியை திறக்க போவது இல்லை. மனுக்களை படிக்கப்போவதுமில்லை. ஆட்சிக்கும் வர போவதும் இல்லை., அம்மா ஆட்சியில் தேனிக்கு நிறைய திட்டங்கள் நிறைவேற்றபட்டது.. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேக்கம்பட்டியில் பாலிடெக்னிக் அரசு சட்டக்கல்லூரி என அடித்தளம் இட்டவர் ஓபிஎஸ் இது சாதாரண விஷயமல்ல. தேனியில் 39 இடங்களில் அம்மா மினி கிளினிக்.
இந்த சாதனையை படைத்தவர் ஓபிஎஸ் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாய கடன் தள்ளுபடி செய்து ரசீது கொடுத்தாகிவிட்டது இந்த மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஒபிஎஸ். மேலும் திணடுக்கல் சபரிமலை ரயில் திட்டமும் நிறைவேற்றப்படும், சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருந்து பாதுகாத்து வருகிறது, அம்மாவின் அரசு இதனை சிறுபான்மையின மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் ரமலான் நோன்பு கஞ்சிக்கு விலையில்லா அரிசி. ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கு 10 கோடி பணமும் உளமாக்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கபட்டது அம்மா அரசு.,
தமிழகத்தில் சாதி மத சண்டைகள் கிடையாது அவதூறு பிரச்சாரத்தை திமுக தேர்தல் நேரங்களில் செய்து வருகிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்கள் இடையே வரவேற்பை பெற்றிள்ளது என எடப்பாடி கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் உரையாற்றினார்,, இதில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு வழிகாட்டி ஜெயபிரதீப் தேனி ஆவின் தலைவரோ ராஜா மற்றும் நகர ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..