போதைப்பொருளுடன் நைஜீரியா ஆசாமி கைது

சென்னை திருவான்மியூரில் கொக்கயின் போதைப்பொருள் கடத்தி வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபரை துணைக்கமிஷனருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருன்வாமியூர் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட கொகைன் போதை பொருட்கள் விற்பனை நடப்பதாக அடையாறு போலீஸ் துணை ஆணையர் விக்ரமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது மேற்பார்வையில் திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம், எஸ்ஐ வசந்த ராஜா, ராஜகோபால் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் திருவான்மியூர் பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது திருவான்மியூரில் பாண்டிச்சேரி பஸ் ஸ்டாண்ட் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபரை சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த பைக்குள் சிறிய சிறிய பாக்கெட்டுகளாக 55 கிராம் ‘கொக்கெய்ன்’ போதை பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் நைஜீரியா நாட்டை சேர்ந்த ஆரிப் ஒலுவாசியன் இப்ராகிம் (வயது 46) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பாஸ்போர்ட், செல்போன் மற்றும் ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பாண்டிச்சேரி சென்ற தன்னிடம் இருந்த மீதம் உள்ள பொருட்களை விற்றுவிட்டு மீண்டும் நைஜீரியா செல்ல விமான டிக்கெட் பெற்றிருந்ததும் தெரிய வந்தது. நைஜீரிய நபரை கைது செய்த தனிப்படையினர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்றக்காவலில் சிறையில் அடைத்தனர். போதைப்பொருளுடன் பாண்டிச்சேரிக்கு தப்ப முயன்ற நைஜீரியா ஆசாமியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!