முதல்வர் முக.ஸ்டாலின் இன்று காலை 7 மணியளவில் போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரை மருத்துவர்கள் மருத்துவ ரீதியாக பரிசோதித்தனர். சுமார் 1/2 மணி நேரம் மருத்துவமனையில் இருந்த மு க ஸ்டாலின், பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார். இது குறித்து மருத்துவர்கள் கூறியது,
முதல்வர் ஸ்டாலின் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வருடத்திற்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படும் மருத்துவ உடல் பரிசோதனை இப்போது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.