போலி எல்இடி டிவிக்கள் விற்பனை – 153டிவிக்கள் பறிமுதல் 3பேர் கைது ; பொதுமக்கள் அதிர்ச்சி!

திருச்சி பீமநகர் பகுதியில் உள்ள சிட்டிபிளாசா வணிகவளாகத்தில் செயல்பட்டுவரும் திருச்சி எலக்ட்ரானிக்ஸ் ஷாப்’ நிறுவனத்தில் தீபாவளிபண்டிகையையொட்டி முன்னனி நிறுவனங்களின் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோகப்பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விடுத்த அறிவிப்பினையடுத்து நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சவுகத் அலி என்பவர் 32இன்ச் எல்இடி டிவியினை வாங்கியதற்கான உரிய கணிணி ரசீது வழங்கப்படாமலும், பழுதுநீக்கத்திற்கு விற்பனை மையத்திலேயே கொடுக்க உரிமையாளர் நிஜாமுதீன் தெரிவித்ததையடுத்து வீட்டிற்கு கொண்டுசென்று டிவியை ஆன்செய்து பார்த்ததில் சந்தேகமடைந்த சவுகத் அலி, சர்வீஸ் சென்டரில் சென்று பரிசோதித்ததில் போலி என்று தெரியவந்ததையடுத்து பாலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து வழக்குபதிவுசெய்த ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் எலக்ட்ரானிஸ் விற்பனைநிலையத்திற்குச் சென்றுசோதயிட்டதில் அங்கிருந்த அனைத்து எல்இடி டிவிக்களும் போலியானவையென்றும், போலியான பொருட்களையே வாடிக்கையாளர்களுக்கு இதுவரை விற்பனைசெய்துவந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கடை உரிமையாளர் நிஜாமுதீன், விற்பனையாளர்களான முகம்மது பைசல், சரவணன் ஆகியோர்மீது 8பிரிவுகளின்கீழ் வழக்குபதிவுசெய்து கைதுசெய்தனர். மேலும் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த முன்னனி நிறுவனங்களின் பெயரில் உள்ள சுமார் 62லட்சம் மதிப்பிலான 153டிவிக்களை பறிமுதல் செய்தனர். தீபாவளி பண்டிகை;காக முன்னனி நிறுவனங்களின் டிவி மற்றும் வீட்டுஉபயோகப்பொருட்கள் தள்ளுபடி விலையில் வாங்கிய பொதுமக்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!