போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரத்தில் கைதான பல் மருத்துவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரி எழும்பூர் கோர்ட்டில் பெரியமேடு போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் கொடுத்ததாக மாணவி தீக்சா மற்றும் அவரது தந்தை பல் மருத்துவர் பாலசந்தரன் ஆகியோர் மீது பெரியமேடு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் பாலச்சந்திரன் பெங்களூருவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
பாலச்சந்திரனுக்கு இடைத்தரகர் ஒருவர் போலி சான்றிதழ் தயாரித்துக் கொடுத்ததாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால் பாலச்சந்திரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த பெரியமேடு போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் 10 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனு மீதான விசாரணை நாளை (6.1.2021) வரவுள்ளதாக தெரிகிறது.