போலி யானைத்தந்தங்களுடன் லாட்ஜில் தங்கியிருந்த 4 பேர் பிடிபட்டனர்: போலீசார் விசாரணை

சென்னை எழும்பூர் தனியார் லாட்ஜில் போலி யானை தந்தங்களுடன் தங்கியிருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் யானை தந்தம் விற்கும் கும்பல் பதுங்கி இருப்பதாக சென்னை, செகரேட்டரியேட் காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரிக்கு ரகசிய தகவல் வந்தது. அதனையடுத்து போலீசார் எழும்பூர் கென்னட் லேனில் உள்ள தனியார் லாட்ஜிக்கு சென்றனர். அங்கு

ள்ள அறைகளில் சோதனை நடத்திய போது அங்கு தங்கியிருந்தது திருச்சியைச் சேர்ந்த வரதராஜ பெருமாள், பாபு, திருப்பதி, பூவரசன் ஆகிய 4 பேர் என தெரியவந்தது. அவர்கள் அறையை சோதனை நடத்திய போது அங்கு யானைத் தந்தம் போன்ற வெள்ளை நிற நீளமான கொம்பு போன்ற 2 பொருட்களை பறிமுதல் செய்தனர். அவை யானைத்தந்தங்களா என்பது குறித்து வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு செய்த போது அது போலி என தெரியவந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவற்றை எழும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலி யானை தந்தங்களை வைத்து பண மோசடியில் ஈடுபட முயன்றார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!