போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர்.. 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு..!

நடுரோட்டில் போலீசுடன் ரகளை செய்த பெண் வக்கீல் மீது வழக்கு: கைது செய்ய தேடுது போலீஸ்

சென்னை,

சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தனுஜா. பெண் வக்கீலான இவரது மகள் நேற்று காலை 7.45 மணியளவில் சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்ட்டங் ரோடு சந்திப்பில் தனது காரில் சென்றார்.

போக்குவரத்து காவலர்கள் ஆனந்த், பிரபாகரன், ரஜித்குமார் ஆகியோர் ஊரடங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வக்கீல் தனுஜாவின் மகளின் காரை மடக்கி எங்கே செல்கிறீர்கள் என கேட்டனர். அவர் மீன் வாங்குவதற்காக செல்கிறேன் என கூறியுள்ளார். ஊரடங்கு சமயத்தில் தேவை இல்லாமல் வௌியே செல்கிறீர்களே என கூறியுள்ளனர். மேலும் அவருக்கு அபராதம் விதித்து ரசீது வழங்கியுள்ளனர். அதனையடுத்து அந்தப் பெண் தனது தாய் தனுஜாவுக்கு தகவல் தெரிவித்தார்.

அடுத்த சில நிமிடங்களில் அங்கு அந்தப் பெண்ணின் தாய் தனுஜா மற்றொரு காரில் வந்தார். மிகவும் ஆக்ரோஷமாக பேசிய தனுஜா தன்னை வழக்கறிஞர் என கூறி, ‘எப்படி என் மகள் மீது வழக்குப்போடுவாய்என கேட்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவலர்களை அவர் ஒருமையில் பேசியதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

அந்தப் பெண் பேசியது முழுவதும் தங்கள் வீடியோவில் பதிவு செய்தனர். பின்பு தனுஜா போலீசாரை மேலும் தகாத வார்த்தைகளால் பேசி விட்டு அபராதம் விதிக்கப்பட்ட காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த சேத்துப்பட்டு போக்குவரத்து காவலர் ரஜித்குமார் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் தகராறில் ஈடுபட்ட தனுஜா மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 269- (தொற்றுநோயை பரப்பும் வகையில் செயல்படுதல்), 270- (தொற்றுநோயை பரப்பும் தீய எண்ணத்திலான செயலை செய்தல்), 188- (அரசின் உத்தரவை மதியாமை), 294 (பி)- ஆபாசமாக திட்டுதல். 353- (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 506(1)- (கொலை மிரட்டல்) ஆகிய 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தனுஜா கத்லா குறித்து போலீசார் நடத்திய விசரணையில் ஏற்கனவே இது போன்று போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் வக்கீலை கைது செய்ய போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!