போலீஸ் என கூறி ஆயுர்வேத மசாஜ் சென்டரில் நகை பறித்த 4 பேர் கும்பல் கைது

ஆயுர்வேத மசாஜ் சென்டரில் போலீஸ் எனக் கூறி நகை, செல்போன் கொள்ளையடித்த 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் லாவண்யா (வயது 22). கடந்த 2 மாதங்களாக சென்னை மேற்கு தாம்பரம், முல்லை தெரு, காந்தி ரோட்டில் தனது வீட்டில் வைத்து ஆயுர்வேத மசாஜ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 24ம்தேதி மாலை 5 மணியளவில், 4 நபர்கள் மசாஜ் சென்டருக்குள் நுழைந்தனர். தங்களை போலீஸ் என கூறிய அவர்கள் லாவண்யாவிடமிருந்து 7 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலி மற்றும் 2 செல்போன்களை பறித்துச் சென்றனர். இது குறித்து லாவண்யா தாம்பரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் திருவேற்காட்டைச் சேர்ந்த சரவணகுமார் (26), சந்துரு (22), ஜெய்சதீஷ் (22), வேல்முருகன் (20) ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிராம் தங்கச்சங்கிலி, 2 செல்போன்கள் மற்றும் 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் போலீஸ் என பொய்யாக கூறி அத்துமீறி நுழைந்து லாவண்யாவின் மசாஜ் சென்டரில் கைவரிசை காட்டியதாக தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!