மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வங்கிக்கடன் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன்,  எடப்பாடி பழனிசாமி பெருமிதம்.  பல்லாவரத்தில் முதலமைச்சருக்கு சிட்லப்பாக்கம் ராசேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு.

தாம்பரம்,

கொரோனா தொற்று காலத்திலும் மகளிர் சுய உதவி குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த போது தாம்பரம், சண்முகம் சாலையில் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் திறந்த வேனில் நின்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவரது பேச்சை மக்கள் ஆர்வத்துடன் கேட்டுக் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்து வரவேற்றார்கள்.

மேலும் அங்கிருந்து புறப்பட்டுப் பல்லாவரம் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் . ராசேந்திரன் மற்றும் பல்லவரம் நகர கழக செயலாளர் பி. தன்சிங் ஆகியோரின் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து பழைய பல்லாவரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அங்கிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிரிடம் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறினார்

தி.மு.. ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வங்கிக் கடன் கொடுக்கப்பட்டது. தற்போது ரூ.80 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் சொந்த கால்களில் நின்று பொருளாதார நிலையில் பெண்கள் உயர்ந்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ரூ.12 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 489 மகளிர் குழுக்களுக்கு ரூ. 898 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2.84 லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்குத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 25,000, ரூ.50 ஆயிரம் ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 8 கிராம் வழங்கப்படுகிறது. ஏழை எளிய கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலத்தில் ரூ.18,000 வழங்கப்படுகிறது. 2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.

மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். ஒன்றரை லட்சம் பேர் இந்த மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கின்றீர்கள்.

நான் சொன்ன செய்திகளை எல்லாம் மக்களிடையே எடுத்துச் சொல்லுங்கள். இது உங்களுடைய அரசு. இது மக்களுடைய அரசு. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு. இந்த அரசு போடும் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். சாதிக்கப் பிறந்தவர்கள் பெண்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்துக்கு அளித்து பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அண்ணா தி.மு.. ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும்.

முதல்வரின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் . ராசேந்திரன் சிறப்பான முறையில் செய்திருந்தார். இதில் தாம்பரம், பல்லாவரம் நகர கழக நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வரின் பிரச்சார கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் . பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் பா. வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் . இராசேந்திரன், பல்லாவரம் நகர கழக செயலாளர் . தன்சிங், பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் என்.சி. கிருஷ்ணன்,

மாவட்ட பொருளாளர் பி.கே. பரசுராமன், சிட்லபாக்கம் பேரூராட்சி கழக செயலாளர் இரா. மோகன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஜி.எஸ். புருசோத்தமன், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பேரவை இணை செயலாளர் துரை முருகானந்தன், பல்லாவரம் நகர பேரவை செயலாளர் த. ஜெயபிரகாஷ், பரங்கிமலை மேற்கு ஒன்றிய வர்த்தக அணி ஒன்றியச் செயலாளர் என்.சி.கே. குமரன், செம்பாக்கம் நகர பேரவை செயலாளர் டி. அய்யனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Translate »
error: Content is protected !!