மகளீர் சுயஉதவிக் குழுக்களின் பெயரில் முறைகேடாக 2 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் லோன் பெற்று தொண்டு நிறுவனம் மோசடி

மகளீர் சுயஉதவிக் குழுக்களின் பெயரில் முறைகேடாக 2 கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் லோன் பெற்று தொண்டு நிறுவனம் மோசடி

தேனி மாவட்டம்,

 பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இமை என்ற தொண்டு நிறுவனத்தை ராஜ்குமார் என்பவர் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அந்த தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு மகளீர் சுய உதவிக்குழுக்களை வடுகபட்டி, மேல்மங்களம், ஜெயமங்களம் உள்ளிட்ட பகுதியில் ஏற்படுத்தி அவர்களுக்கு வங்கிகளில் கடன் தொகை பெற்று வழங்கி வந்த நிலையில் 2018ஆம் ஆண்டு மேல்மங்களம் 70க்கும் கடன் பெற்று தருவதாக கூறி வாங்கி சென்ற நிலையில் 700க்கும் மேற்பட்டோருக்கு

கடன் பெற்று தராத நிலையில் கட்ந்த சில தினங்களுக்கு மேற்பட்ட மகளீர் சுய உதவிக் குழுக்களை உறுவாகியதாகவும், அவர்களிடம் இருந்து ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவங்களை பெற்று வங்கியில் முன்பு கடன் பெறாத பெண்களுக்கு வங்கியில் பெற்ற கடன் தொகையும், வட்டியும் கட்ட உத்தரவிட்டு வழக்கறிஞர் நோட்டிஸ் மற்றும் வங்கி நோட்டிஸ் வந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்கள் கடன் வாங்காமல் வங்கியில் கடன் பெற்றதாகவும்,

கடனை கட்ட உத்தரவிட்டு நோட்டிஸ் வந்த நிலையில் அதிர்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் பெயிரில் முறைகேடாக கடன் பெற்ற இமை தொண்டு நிறுவன ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறித்தினர்.

இதனை தொடர்ந்து சாலை ஓரத்தில் அமர்ந்த பெண்கள் முறைகேடாக 2 கோடி ரூபாய் மோசடி செய்தவர் நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரினர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமாரிடம் பெண்கள் தங்கள் ஆவனங்களை பெற்று மோசடி செய்துள்ளதை தெரிவித்து புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து சென்றனர்.

 

Translate »
error: Content is protected !!