மகாராஷ்டிராவில், கோவிட் பரவலால் மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள் இன்று முதல் மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பின்னர் கொரொனா ஊரடங்கு உத்தரவில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் இன்றுமுதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் முதல்வர் உத்தவ் தாக்கரே பிறப்பித்தார். அதேநேரம், பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில், ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில்களில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி உரிய சோதனைகளுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.