மக்களுக்கு சேவை செய்ய தயார் – துணை அதிபர் கமலா ஹாரிஸ் டுவிட்

மக்களுக்கு எப்போதும் சேவை புரியத் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவி ஏற்ற தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பிடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்கும் விழா இன்று நடைபெற்றது. அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண், முதல் கருப்பின, முதல் தெற்காசிய துணை அதிபர் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.

பதவி ஏற்பின் போது, அமெரிக்க துணை அதிபரின் பணியை நான் உண்மையாக நிறைவேற்றுவேன் என்றும், அமெரிக்க அரசமைப்பை பாதுகாக்க தன்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன் என்றும் தன்னுடைய உறுதிமொழி ஏற்பில் கமலா ஹாரிஸ் கூறினார். பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்ட பின்னர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மக்களுக்கு எப்போதும் சேவைபுரிய தயார்என்று தெரிவித்தார். அவர் வெளியிட்ட மற்றொரு டுவிட்ட பதிவில், ‘நான் இந்தப் பதவியை அடைந்ததற்கு, என் முன்பாக தோன்றிய பெண்களே காரணம்என்று கூறி, தனது தாய் உள்பட எண்ணற்ற கருப்பின பெண்கள் அடங்கிய காணொலியை அந்தப் பதிவுடன் இணைத்திருந்தார்.

 

Translate »
error: Content is protected !!