நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தலைமைச் செயலகத்தில் 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.
அதில் குறிப்பிட்ட முக்கிய விவரங்கள்:
ஒரு கிலோமீட்டர் பேருந்து இயக்கினால் போக்குவரத்து துறைக்கு ரூ .59.15 இழப்பு ஏற்படும். டீசல் விலைக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தத் தவறியதும் போக்குவரத்துத் துறைக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமல் போக்குவரத்து துறை நெருக்கடியில் உள்ளது.
மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே போக்குவரத்து துறை நஷ்டத்தில் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வாகன வரி குறைவாக உள்ளது என்று அவர் கூறினார்.