மங்களூரு அருகே சரக்கு கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உள்பட 3 பேர் உயிரிழ்ப்பு..!

மங்களூரு அருகே சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உள்பட 3 பேர் உயிரிழ்ப்பு . மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது..

கப்பல் மோதியது

தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 38). இவர், மாமனார் தாசன் (60). இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான அரப்பா என்ற மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க சென்றனர். இவர்களையும் சேர்த்து தமிழக மீனவர்கள் 7 பேரும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 7 மீனவர்களும் என 14 பேர் படகில் பயணம் செய்தனர்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து 55 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த .பி.எல். லீ ஹாவேரே என்ற சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் இவர்களது விசைப்படகில் மோதியது. இதனால் படகு கடலில் மூழ்கியது.

இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுனில் தாஸ் ஆகிய இரு மீனவர்களையும் கப்பல் ஊழியர்கள் மீட்டனர். இந்த விபத்தில் 3 மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டது.

அந்த படகில் இருந்து மாயமான 9 மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். குமரியை சேர்ந்தவர்கள்.. இந்தநிலையில் பிணமாக மீட்கப்பட்ட 3 பேரின் அடையாளம் காணும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர்அப்போது பிணமாக மீட்கப்பட்டவர்களில் குமரி மாவட்டத்தை சேர்ந்த அலெக்சாண்டர் மற்றும் அவரது மாமனார் தாசன் என்பதும், மற்றொருவர் மேற்குவங்கத்தை சேர்ந்த மாணிக் தாஸ் என்பதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து குமரி மாவட்டம் குளச்சலில் உள்ள அலெக்சாண்டர் மற்றும் தாசன் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதனர். அதை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் மங்களூருவுக்கு  விரைந்துள்ளனர். படகு மீது கப்பல் மோதிய விபத்தில் குமரியை சேர்ந்த மருமகன் மற்றும் மாமனார் பலியான சம்பவம் குளச்சல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!