மஞ்சளார் அணை முழு கொள்ளவுடன் இருப்பதால்.. புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு நீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையானது கோடையில் பெய்த கன மழையால் கடந்த மாதம் 4ஆம் தேதி அதன் முழு கொள்ளவான 55 அடியை எட்டியது. இந்நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு பயண்படும் குளங்களில் நீர் நிறைக்கப்பட்டது.

இதனிடையே மஞ்சளார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு  வாய்க்கால் பாசனத்தில் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் நேரடி பாசனத்தில் உள்ளது. மஞ்சளார் அணையில் தற்பொழுது கடந்த 25 நாட்களுக்கும் மேலாக முழு கொள்ளவுடன் இருப்பதால் புதிய ஆயக்கட்டு விவசாயிகளுக்கு பாசனத்திற்கு நீர் திறந்து விட்டால் தற்பொழு ஒரு போக சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,

மேலும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பெய்யும் நிலை  உள்ளதால் மேலும் ஒரு போகம் என இரண்டு போக நெல் சாகுபடி செய்யும் நிலையில் சூழ்நிலை உள்ளதால்    மஞ்சளார் அணையின் புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு அணையில் இருந்து பாசனத்திற்கு  தமிழகஅரசு உடனடியாக புதிய ஆயக்கட்டு பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நீர் திறந்து விடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!