மதுபானம், மசாஜ் வசதியுடன் ‘தங்கரதம்’ ரயில் சேவை மீண்டும் தொடங்க முடிவு!

நவீன உணவுக் கூடம், மசாஜ் மையம், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில் சேவை, வரும் ஜனவரி மாதம் இயக்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.

கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தங்கரதம்’ சொகுசு சுற்றுலா ரயில், கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை.

பின்னர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி. அந்த ரயில் ஒப்படைக்கப்பட்டு, தற்போது பல்வேறு சொகுதி வசதிகளுடன் தங்கரதம் ரயில் பளபளப்பாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் தற்ஒது ஸ்மார்ட் டி.வி, உடற்பயிற்சிக்கூடம், மசாஜ் சென்டர், மதுபானக்கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தவாறே உணவு உண்ணும் வகையில் ‘ருசி’ மற்றும் ‘நளபாகம்’ என்ற பெயரில், இந்த ரயில் இரு உணவகங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த சொகுசு ரயில் கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில், வரும் ஜனவரி முதல் இயக்கப்பட உள்ளது.

இந்த சொகுசு ரயலில் பயணம் ஒருவருக்கு குறைந்தபட்ச கட்டணமே லட்சத்தில் இருந்துதான் ஆரம்பமாவதாக ஐ.ஆர்.டி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

Translate »
error: Content is protected !!