மனைவியின் ஆபாச புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்ட கணவன் கைது

ரூ. 10 லட்சம் வரதட்சணை தர மறுத்த மனைவியின் ஆபாசப்புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனை சென்னை அயனாவரம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அயனாவரம், பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் பவானி (வயது 28). இவரது கணவர் விஜயபாரதி (வயது 29). தனது முதல் கணவரை பிரிந்த பவானி விஜயபாரதியுடன் திருமணம் செய்யாமல் கடந்த 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்துள்ளனர். பவானியும், விஜயபாரதியும் அயனாவரத்தில் உள்ள பழனியப்பா தெருவில் தனிக்குடித்தனம் இருந்தனர். இந்நிலையில் விஜயபாரதி, மனைவியிடம் ரூ. 10 லட்சம் பணம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக தெரிகிறது. அவர் தர மறுத்ததால் மனைவியின் ஆபாசப் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அது தொடர்பாக பவானி சென்னை அயனாவரம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் விசாரணை நடத்தியதில் அது உண்மை என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விஜயபாரதி மீது 323 (அடித்து காயப்படுத்துதல்), 312 (கருவைக்கலைத்தல்), 498 (ஏ) (வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல்), 506(1) (கொலை மிரட்டல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67 (ஏ) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த விஜயபாரதியை நேற்று கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!