இரண்டு கட்ட ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
மும்பை,
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான பரிசோதனைக்கு பின், அவசர பயன்பாட்டுக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்தார்.
அதன்பின்னர் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது. இதற்காக தடுப்பூசி மையங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பிற முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி திட்டம் சுகாதார பணியாளர்களிடையே புதிய நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.
மும்பை கூப்பர் மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக வரும் பயனாளிகளை, மருத்துவமனை ஊழியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். குடோனில் இருந்து தடுப்பூசி மருந்து மருத்துவமனைக்கு வந்தபோது, சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.
#WATCH | Health workers clap and cheer as COVID-19 vaccine reaches the vaccination centre at Cooper hospital in Mumbai, Maharashtra. pic.twitter.com/QOp2X15Cs8
— ANI (@ANI) January 16, 2021