மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு

நிவர் புயல் காரணமாக சென்னையில் கமிஷனர் மகேஷ்குமார் நேரில் சென்று மழைநீர் அகற்றும் பணியினை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை நகரில் மழை வெள்ளம் குறித்த அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவதற்குறிய நடவடிக்கைகளில் சென்னை நகர காவல்துறை கடந்த வாரமே தயாரானது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை நகர ஆயுதப்படை எஸ்ஐக்கள் தலைமையில், ஆயுதப்படை காவலர்கள் கொண்ட 12 பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நிவர் புயல் உருவாகியுள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரங்களில் அதிகளவு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சென்னை வாழ் பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் பாதுகாப்பு அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று நிவர் புயல் காரணமாக சென்னையில் அடைமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரில் உள்ள முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில்b மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் சென்னை நகர காவல்துறை, மின்சார வாரியம், மெட்ரோ வாரிய அதிகாரிகள் இணைந்து செய்து வருகின்றனர். அந்த பணியினை மகேஷ் குமார் அகர்வால் எழும்பூர், மாண்டியத் சாலை பகுதிக்கு சென்று அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியினை பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.

Translate »
error: Content is protected !!