மாவட்ட ஆட்சியர் சிவராசு கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ் வளர்ச்சி மற்றும் நினைவகங்கள் துறை சார்பில் 99.25 லட்சம் மதிப்பீட்டில் நூலக துடன் கூடிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் மற்றும் 43.40 லட்சம் மதிப்பீட்டில் நீதிகட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் 42.69 லட்சம் மதிப்பீட்டில் தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 4.29 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு கிடங்கு கட்டிட பணிகளையும் ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைந்து முடிக்க குறித்த காலத்தில் ஒப்படைக்கவும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர்,… கொரோனாவால் தாமதமான மணிமண்டபம் கட்டும் பணியானது பிப்ரவரி இறுதிக்குள்ளும், ஜனவரி மாத இறுதிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அறை கட்டுமான பணிகள் நிறைவுபெறும் என்றும், 2535 வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான 4600 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மத்திய பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும், அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் முதல் கட்ட பரிசோதனை முடித்து பாதுகாப்பாக வைக்கப்படும். கட்டுமான பணிகள் முடிந்த பட்சத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இங்கு வைக்கப்பட்டு தேர்தலின்போது பிரித்து அனுப்பப்படும். சிசிடிவி வசதியுடன் அனைத்து நவீன பாதுகாப்புகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறை ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மழையால் சேதமடைந்த சாலைகள் மாநகராட்சியில் 38 கோடிக்கான பணம் கோரப்பட்டு கிடைக்கும் பட்சத்தில் ஜனவரி மாதம் முதல் பணிகள் தொடங்கும் என்றும், மாநகரில் சேதமடைந்த சாலைகள் துரிதகதியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார், திருச்சி மாவட்டத்தில் தொடர் மழையால் 25 சதவீத ஏரி குளங்கள் நிரம்பி உள்ளதாகவும், வடக்கு பகுதியில் மழை இல்லை, தெற்கு பகுதியில் போதுமான மழை அளவு இல்லை, வடகிழக்கு பருவ மழையின் போது மழையை எதிர்பார்த்து இருப்பதாகவும், தற்போது வரை வடகிழக்குப் பருவ மழையில் 20 சதவீதம் மழைப்பொழிவு குறைவாகவே இருப்பதாக தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!