தமிழகத்தில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்தியுள்ளது சென்னை மாநகராட்சி. இந்நிலையில், நேற்று முன்தினம் (08.04.2021) தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது.அந்தக் கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன.
சென்னையில் மாஸ்க் முழுமையாக அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம்,பொது இடத்தில்எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம், கரோனாகுவாரண்டைன் விதியை மீறினால் 500 ரூபாய் அபராதம் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
சென்னையில் கரோனா விதிமுறைகளை மீறுவோரிடம்நாள்தோறும் 10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கஇலக்கு வைத்துள்ளதுசென்னை மாநகராட்சி. அதிகபட்ச இலக்காகராயபுரம், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில், ஒருநாளில் 1.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
சென்னையில் உள்ள சலூன், ஜிம், ஸ்பாக்கள் ஆகியவை விதிகளை மீறினால் 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் மாஸ்க்போடாதவர்களிடம்200 ரூபாய் அபராதம் வசூலிக்கும் பணியைத் தொடங்கியது சென்னை மாநகராட்சி.