மீண்டும் மிரட்டும் புயல்: முதல்வர் பழனிச்சாமி நாளை ஆலோசனை

வங்கக்கடலில் புதிய புயல் உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், புதுச்சேரி – மரக்காணம் இடையே கரையை கடந்தது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் பலத்த மழை பெய்தது. எனினும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும், துரிய செயல்பாடுகளாலும், பெரிய அளவில் பாதிப்போ, சேதமோ ஏற்படவில்லை.

இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது புரெவி என்ற புயலாக மாறி, டிசம்பர் 2ம் தேதி இலங்கை – நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்திற்கு மீண்டும் புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாலும், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னையில் ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நண்பல் 12 மணியளவில் நடக்கும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Translate »
error: Content is protected !!