இத்தாலி நாட்டில் உள்ள மக்கள் இனி 28 முதல் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து இத்தாலி நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாட்டின் குறைந்த கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் முக கவசங்களை அணிவதில் இருந்து பொது மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கொரோனா வெளிப்பாடு அதிகமாக இருக்கும் ஒரு சில பகுதிகளில் அந்த தளர்வுகள் பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இங்கிலாந்தைத் தொடர்ந்து இத்தாலி நாடும் முக கவசம் அணிவதில் இருந்து பொதுமக்களுக்கு விலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.