முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீரபாண்டி முல்லைப்பெரியாற்று தடுப்பணை நிரம்பி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் முல்லைப் பெரியாற்று கரையோரம் இருக்கும் பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் அறிவித்துள்ளனர்.