முன்விரோதம் காரணமாக மூதாட்டியை கொலை செய்த வழக்கில் தந்தை மகன்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தேவதானபட்டி தெற்கு தெரு பெரியமுருகன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தது 15 11 2012 அன்று உதயகுமார், முத்து, இவர்களின் தந்தை மொக்கை ஆகிய மூவரும் சேர்ந்து பெரியமுருகன் என்பவரை தாக்க வந்தபோது பெரிய முருகன் என்பவரது தாய் ராமாயி கடப்பாறை மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியபோது அதைத் தடுக்க வந்த பெரியமுருகனின் மனைவி லட்சுமி மகள் பூங்கொடி மற்றும் அவரது தாய் ராமாயி பலத்த காயமடைந்த நிலையில் ராமாயி சம்பவ இடத்திலேயே பலியானார் .
இதுகுறித்த தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளீர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் உதயகுமார், முத்து மற்றும் அவரது தந்தை மொக்கை ஆகிய மூவருக்கும் மூதாட்டியை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் இரண்டு சிறை தண்டனையும் மேலும் இரண்டு பெண்களை தாக்கி காயப்படுத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தேனி மகிலா நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெங்கடேசன் கதீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூவரையும் மதுரை மத்திய சிறைக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.