மெட்ரோ ரெயிலில் அதிகபட்ச கட்டணமான 70 ரூபாயை ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
2 கிலோ மீட்டர் வரை 10 ரூபாய் கட்டணம், 2 முதல் 5 கிலோ மீட்டர் வரை கட்டணம் ரூ.20.
5 முதல் 12 கிலோ மீட்டர் வரையிலான கட்டணமான 40 ரூபாயை ரூ.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
க்யூ ஆர் கோடு, தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணித்தால் 20 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை–விம்கோ நகர் வழித்தடத்திற்கும் சேர்த்து இனி 54 கிலோ மீட்டர் 100 ரூபாயே வசூலிக்கப்படும். ஏற்கனவே வண்ணாரப்பேட்டை–விம்கோ நகர் வழித்தடம் தவிர்த்து 45 கிலோ மீட்டர்க்கு ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது.